Thattaan Thattaan Song Lyrics....karnan movie song
Director Mari Selvaraj
Producer Kalaipuli S Thanu
Singers Dhanush & Meenakshi Ilayaraja
Music Santhosh Narayanan
Lyrics Yugabharathi
தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
யேய் சொக்கப்பான மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
மொட்டப்பார பூவா வெடிச்சேனே
உச்சி தேன வாரி குடிச்சேனே
என் கைரேக பாத்த பேச்சி
கதை சொன்னாலே நீயே சாட்சி
நான் போற வர பாதையில
நெறிஞ்சி முள்ள ஒதுக்கும் உம்பார்வ
ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம் ஹேய்
யேய் சொக்கப்பன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
குதிலுல நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்
தெருவுல போனாலும்
ஏலேலேலே
புழுதியா வந்தாலும்
ஏலேலேலே
தாவணி ராசாவா மாத்த சொல்லும்
செந்தணலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூறல் அடிக்கும்
ஊர் நெழலா நான் இருக்க
என் நெசமே நீதாண்டி
முத்தத்த தாயேன் ராசாத்தி
மொத்தமும் தாரேன் கைமாத்தி
ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
யேய் சொக்கப்பன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
உழவன் வயலுல இறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொன்னா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழக்குடியாம்
பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிக்குடியானோம்
ஜெயிச்சிடு கண்ணு ஜெயிச்சிடு கண்ணு
காக்கா குருவி நிதம் கூட்டம்போட்டு
நம்ம கதைய பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே
ஒடம்பெடுத்து தீகொழுத்து
உயிர் எரிய நனைஞ்சே கெடப்போம்
தட்டான் தட்டான்
ஹேய் தட்டான் தட்டான்
ஹே தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்கப்பான மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
ஹேய் தட்டான் தட்டான்
